Bookstruck

சிறந்த பரிசு

ஒரு ராஜா தன் அரசவையில் சில ஆவணங்களை பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு கவிஞர் வந்து அந்த ராஜாவை புகழ்ந்து ஒரு கவிதை சொன்னார் – "ஓ பிரதாபி சக்ரவர்த்தி! இந்திரனைப் போல் உங்களுடைய ஒளி இருக்கிறது..." என்று. அந்த ராஜாவுக்கு இந்தப் புகழ்ச்சி பிடிக்கவில்லை. அவர் தன்னுடைய பொக்கிஷதாரரை அழைத்து அந்த கவிஞருக்கு நூறு ரூபாய் கொடுக்க சொன்னார். அப்பொழுது அந்த கவிஞருக்கு அளவில்லாத சந்தோஷம் ஏற்பட்டது. அவர் ராஜாவை குபேரன் மற்றும் கர்ணனுடன் ஒப்பிட்டு இன்னொரு கவிதை சொன்னார். ராஜாவுக்கு கோபம் வந்தது இருந்தாலும் பொக்கிஷதாரரை அழைத்து "நூறு ரூபாய் இல்லை, ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்!" என்று சொன்னார். பொக்கிஷதாரர் அந்த கவிஞரை வெளியே உட்காரச் சொல்லி ராஜாவிடம் வந்து கேட்டார் – "மகாராஜா! கவிஞருக்கு நூறு கொடுக்க வேண்டுமா இல்லை ஆயிரம் கொடுக்க வேண்டுமா?" "ஏய், எதை கொடுக்கணுமோ அதை நான் கொடுத்தேன்! நீ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் என்னை பொய் சொல்லி புகழ்ந்தார், நானும் பொய் சொல்லி அவரை புகழ்ந்தேன். இப்பொழுது கொடுக்க என்ன இருக்கிறது?" என்று ராஜா சொன்னார்.