சிறந்த பாடகர்
சிர்பூர் ராஜாவின் மனதில் ஒரு நாள் திடீரென ஒரு யோசனை வந்தது, தன் அரசவையில் கவிஞர்கள் மற்றும் பண்டிதர்களுடன் ஒரு பாடகரும் இருப்பது நல்லது. இந்த யோசனையை மந்திரியிடம் சொல்லி பாடகரை தேர்ந்தெடுப்பதற்காக ஒரு போட்டி வைக்க ஆணையிட்டார்.
"மன்னர் அவர்களே, உங்கள் யோசனை மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த பரீட்சைக்கு தேர்வு செய்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் ?" என்று மந்திரி கேட்டார்.
"வேறு யார் இருப்பார்கள் ? நான், ராணி மற்றும் நீங்கள்தான் பரீட்சகராக இருப்போம். நாங்கள் அங்கே இசை பிரியர்களாக இருக்கிறோம். அதனால் வெளியே இருந்து இசை வித்வான்களை கூட்டி வருவது அர்த்தமற்றது," என்றார் ராஜா.
பார்க்கப்போனால் ராஜாவுக்கு இசையில் அதிகமான ஆர்வம் இருந்தது. ஆனால் இசை சம்பந்தப்பட்ட அறிவு எதுவும் இல்லை. ஆனால் ராணிக்கு இசை சம்பந்தமாக நல்ல அறிவு இருந்தது.
ராஜாவின் கட்டளையின் படி மந்திரி நாட்டில் உள்ள இசை வித்வான்களையும் சாதாரண மக்களையும் அழைத்தார். இசை வித்வான்களின் மத்தியில் இசையின் போட்டி மூன்று நாட்கள் நடந்தது. எல்லோரும் தங்கள் பாடலை அரசவையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பாடினார்கள்.
இசை வித்வான்களில் மூன்று பேரை ஒவ்வொருவராக தேர்ந்தெடுத்தனர். முரளிநாத்தை ராஜாவும் வேணுநாத்தை ராணியும் சுசங்கீத்தை மந்திரியும் தேர்ந்தெடுத்தனர். ஒவ்வொருவரும் மூன்று பேரை தேர்ந்தெடுத்தனர்.
ராஜா தனது தேர்வை விளக்கிக்கூறுகையில், "முரளிநாத்தின் இசை அற்புதமாக இருந்தது. அதை கேட்டதும் நான் என்னை மறந்தேன். நீங்கள் இருவரும் யாரை தேர்ந்தெடுத்தீர்களோ அது அவ்வளவு சிறப்பாக இல்லை. அவன் அவ்வளவு சிறப்பாக பாடவில்லை," என்றார்.
அதற்கு ராணி, "முரளிநாத் மட்டும் எப்படி ? வேணுநாத் மிகவும் நன்றாக பாடினான். மற்ற இருவரும் இசை அறிவில் சிறந்து இருப்பதாக தெரியவில்லை. இசை ஞானம் இல்லை என்றால் உண்மையான அர்த்தத்தில் இசை வித்வான் என்று சொல்ல முடியாது. அதனால் நான் வேணுநாத்தை தேர்ந்தெடுத்தேன்," என்றாள்.
அதற்கு ராஜா மந்திரியை பார்த்து, "மந்திரி அவர்களே, நீங்கள் சுசங்கீத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன ?" என்று கேட்டார்.
"மன்னர் அவர்களே, சுசங்கீத்துக்கு இசை சம்பந்தமான அறிவும் இருக்கிறது. சிறப்பாக பாடுகிறான். உண்மையான பாடகர் பண்டிதர்களையும் முட்டாள்களையும் மகிழ்விக்க வேண்டும். இந்த சக்தி சுசங்கீத்துக்கு மட்டும் தான் இருக்கிறது. இது என் கருத்து மட்டும் இல்லை. அங்கே இருந்த பண்டிதர்களும் முட்டாள்களும் என் கருத்தை ஒத்துக்கொண்டார்கள்," என்று மந்திரி பதில் அளித்தார்.
இந்த பதிலை கேட்டதும் ராஜாவும் ராணியும் ஆச்சரியப்பட்டார்கள். ஒரே குரலில் "என்னது இசை வித்வான்களும் சாதாரண இசை பிரியர்களும் உங்கள் கருத்தை ஒத்துக்கொண்டார்களா ? அவர்களின் கருத்தை எப்போது கேட்டீர்கள் ?" என்று கேட்டார்கள்.
"அந்த மூன்று இசை வித்வான்களும் அரசவையில் பாடிக்கொண்டிருந்தபோது நான் அந்த பாடலை கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்களின் உணர்வுகளை கவனித்தேன்," என்று மந்திரி சொன்னார்.
"முரளிநாத்தின் பாடல் கேட்டதும் நான் என்னை மறந்துட்டேன். அதனால் என் கவனத்தை மற்ற மக்கள் பக்கம் திருப்பவில்லை," என்றார் ராஜா.
"வேணுநாத் பாடும்போது அவனுக்கு இருந்த இசை ஞானத்தை பார்த்து நான் மயங்கிட்டேன். அதனால்தான் ராஜாவையும் அங்கு இருந்தவர்களையும் கவனிக்கவில்லை," என்று ராணி சொன்னாள்.
"நாம் யாரை பாடகராக தேர்ந்தெடுக்கப் போகிறோமோ அவன் நம்ம மூன்று பேருக்கு மட்டும் இல்லாமல், ராஜ்யத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் இசை வித்வான்களுக்கும் முட்டாள்களுக்கும் திருப்தி தர வேண்டும். ராஜாவுக்கும் இப்படித்தான் தோணும் என்று நினைக்கிறேன்," என்று மந்திரி சொன்னார்.
"ஆமா ஆமா, நான் அப்படித்தான் நினைச்சேன்," என்றார் ராஜா.
"இப்போ நான் சொல்லபோறேன் அந்த மூன்று பாடகர்களும் பாடும்போது அங்கே இருந்த பொதுமக்களின் உணர்வுகள் எப்படி இருந்தது என்று. எல்லோரும் கவனமாக கேளுங்க. முரளிநாத் பாடும்போது அரசவையில் இருந்த எல்லா பண்டிதர்களும் ஒருவர் ஒருவராக எழுந்திருச்சி போய்ட்டாங்க. மக்கள் மட்டும் தலையை ஆட்டிட்டு கடைசி வரை உட்கார்ந்து இருந்தாங்க. இப்போ வேணுநாத்தை எடுத்துக்கிட்டா அவன் பாடும்போது மக்கள் எல்லாம் எழுந்திருச்சி போய்ட்டாங்க ஆனா இசை பண்டிதர்கள் கடைசி வரை ரசிச்சிட்டு உட்கார்ந்து இருந்தாங்க. ஆனால் சுசங்கீத் பாடும்போது பண்டிதர்களும் மக்களும் கடைசி வரை மயங்கி உட்கார்ந்து இருந்தாங்க.
இதனால்தான் நான் இவங்கள தேர்ந்தெடுத்தேன்," என்று மந்திரி கூறினார்.
மந்திரியின் யோசனை சரியென்று பட்டதால் ராஜாவும் ராணியும் ஆலோசனை பண்ணிட்டு ஒப்புக்கிட்டு அவன அரசவை பாடகரா தேர்ந்தெடுத்தாங்க.